வெள்ளி, 4 செப்டம்பர், 2020

*என்னுரை*

 

*என்னுரை* 

எனது இலக்கிய பயணம் ஆரம்பமாகி மூன்று தசாப்தங்கள் கடந்து விட்டன. மடவளை மதீனா தேசிய பாடசாலையின் பொற்காலம் என வரலாற்றில் அறியப்பட்ட 1980களின் இறுதி பகுதியில் செல்வி சி. கணபதிப்பிள்ளை என்ற தமிழ் பாட ஆசிரியையின்  தமிழ் பாட வகுப்பில் தான்,   நான் கவிதைகளை நேசிக்கக் கற்றுக் கொண்டேன்

இதே வருடங்களில் தான்இன்று தமிழ் இலக்கிய உலகத்துக்கு நன்கு பரிட்சயமான எனது  வகுப்பு நண்பன் கவிஞர் அன்சார் எம் ஷியாமின் ஆரம்ப கால புதுக் கவிதைகளையும் ஹைக்கூ கவிதைகளையும்  படித்தும் கேட்டும் வந்ததோடு நானும் கவிதை எழுத வேண்டுமென்ற தூண்டுதளைப்  பெற்றேன்.

எல்லாம் வல்ல இறைவனின் அருளால் 1989ம் ஆண்டில் பல அறிஞர்களைப்  போலவே கவிஞர்களையும் உருவாக்கிய நளீமியா எனும் இஸ்லாமிய கலாசாலையில்  இணைந்து கொண்டேன். நளீமியாவில் தமிழ் மொழியையும்  அரபு மொழியையும்  இலக்கண இலக்கியங்களோடு  கற்பதற்கான வாய்ப்பும் கிட்டியது. புனித அல்குர்னை சிறப்பாக விளங்கிக் கொள்வதற்கு  கவிதை இலக்கியமம் மிக பிரதானமான ஒரு அம்சம்  என்பதை ஆசிரியர்கள் மூலம் அறிந்ததைத் தொடர்ந்து தமிழ் கவிதை இலக்கியத்திலே இன்னும் ஆர்வம் காட்டலானேன். கவிஞர் கந்தளாய் தாரிக் என்பவரிடம் முறையாக தமிழ் மரபுக்கு கவிதையை கற்றுக் கொண்டேன். 

தமிழ் இஸ்லாமியஅரபு இஸ்லாமிய  நூல்கள் மட்டும் அல்லாமல்   பல்வேறு தமிழ் மொழி சார் இலக்கியங்களோடும் நெருங்கிய உறவு வளர்த்த காலமது. வைரமுத்துமு .மேத்தாகண்ணதாசன்அப்துல் ரகுமான் போன்ற  கவிஞர்களையெல்லாம் வாசித்து நேசிக்கலானேன். அதனைத் தொடர்ந்து  ஒரு மெல்லிய கோட்டில் தொடர்ச்சியாகவும் விட்டு விட்டும் இலக்கியத்துடனான என்  உறவு வளர்ந்து வந்துள்ளது. பல தமிழ் கவிதைகளை எழுதலானேன்.

      மதீனா தேசிய பாடசாலையில் கவிதைகளை நேசிக்கத்  தெரிந்த எனக்குள் இருந்த கவிதை அனல்கள்  நளீமியா இஸ்லாமிய வளாகத்தில் சுடர் விடவும்  பிரகாசிக்கவும்  தொடங்கின. நான் எண்ணிப் பார்க்காத அளவுக்கு அதிகமான பல கவிஞர்களோடும்   ,கவிதை மேடைகளோடும்  கவிதை நூல்களோடும்   வாழும் வாய்ப்பைப் பெற்றதால் எனது இலக்கிய வாழ்வின்  பொற்காலம் நளீமியாவில் கழிந்த அந்த அழகிய நாட்கள் தான்,

எனது கண்ணிக் கவிதைகள்  "பேனாக்களின்காங்கிரசு"   எனும் வாராந்த பதாகையில் பிரசுரமாகினதொடர்ந்து மாணவர் மன்றங்களில் ஒலிக்கலாயின. பின்னர் தேசிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளியாகின. இவற்றை விடுமுறை காலங்களில்  கவிஞர் அன்சார் எம் ஷியாமோடு காட்டி அவரின் கருத்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றதுண்டு.இவ்வாறு  நாமிருவரும்  எமது கவிதைகளோடு தூங்காமலே பல  இரவுகளை  கழித்ததுமுண்டு

 

நூற்றிப் பத்து மைல்களுக்கு அப்பால் சென்று கல்வி பயின்ற ஏழு வருட காலத்தில் பெற்றோரையும் உறவினர்களையும் தற்காலிகமாக பிரிந்த துயரோடு , எழுதிய எனது  குடும்பக் கவிதைக ளும்  சமூகம் சார்ந்த சில கவிதைகளும்  காலத்தால் முந்தியவை.

எதிர் கால மனைவிக்கு எழுதிய பல கவிதை களோடு இருபத்தி ஒராம்  நூற்றாண்டு ஆரம்பமாகியது. 2010 ம் ஆண்டாகும் போது அடிக்கடி ஆக்கிரமிக்கப் படும் பலஸ்தீன் பூமி பற்றியும்அரபு நாடுகளில்  உருவான அரபு வசந்தத்தின் போது தேடப் பட்ட மாற்றங்கள் பற்றியும்  பல சீரியஸான கவிதைகளை ஹாரூன் மூஸா வாக எழுதி வந்தேன். 

ஒரு கவிதைத் தொகுப்பை 2020ல் பிரசுரித்துவிட வேண்டும் என்ற விடா ப்  பிடியில்           ஆரம்ப காலங்களில் எழுதிய பல கவிதைகளை செம்மைப் படுத்தும் பணியை இந்த ஆண்டில் செய்து முடித்தேன். 

மூன்று தசாப்த அறிவுஆற்றல்அனுபவங்களோடு வார்க்கப் பட்ட பல கவிதைகள் 2011க்குப் பின் ஹாரூன் மூஸா என்ற பெயரோடுயூடியூப் தளத்தில் ஒலி ஒளி வடிவத்தில் பதியப்ப பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடாத தக்க ஒரு விடயமாகும். .இவ்வாறு ஒரு பிள்ளையின் வளர்ச்சி போல் குழந்தையாகசிறுவனாகவாலிபனாககணவனாகதந்தையாக எனது கவிதையும்  கட்டம் கட்டமாக மூன்று தசாப்தங்கள் வளர்ந்துள்ளது என்பது எனது தாழ்மையான கருத்தாகும். எனது  கவிதைகளின் வயதுக்கேற்பவே  அவற்றின் ஆழ அகலங்கள் அமைந்துள்ள காரணத்த்தால்சகலராலும் புரிந்து கொள்ளும் கவிதைகளாகவே இவைகள் யாவும் அமைந்துள்ளன என்று உறுதியாக நம்புகிறேன்.,பல்வேறு காலகட்டங்களில்- பாரிய கால இடைவெளிகளில் இந்தக் கவிதைகளை நான் எழுதி வந்ததால் கவிதைக்குக் கவிதை அதன் உள்ளடக்கத்திலும் தரத்திலும் கணிசமான  வித்தியாசத்தைக் மிக இலேசாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்..   

 

கவிதைகளுக்கும் இலக்கியத்திற்கும் இஸ்லாம் வரையறுத்திருக்கும் எல்லைக் கோடு ஒன்று தெளிவாக இறைவனால் போடப் பட்டுள்ளது. அதாவது ஈமான் கொண்டு நற் செயல்கள் புரிந்து இறைவனை அதிகமாக தியானம் செய்து வரும் கவிஞர்களைத் தான் இஸ்லாம் வரவேற்கின்றது. இந்த  எண்ணக் கருவில் இருந்து தான் எனது கவிதைகளையும் பெற்றெடுக்க முயற் சித்துள்ளேன்.

நான் கடந்து வந்த  பாதையில் என்னோடு பயணம் வந்தவற்றோடும் வந்தவர்களோடும்         எனக்கு இருந்த உண்மையான அன்பு பாசம் காதல் எனும்  எனது மனோ பாவத்தைத் தழுவி இந்தக் கவிதைகளை  படைக்க முனைந்துள்ளேன்.

 

மேலும்  நான் வாழ்ந்த  பழைய  புதிய சமூக சூழலின் அரசியல் சமூக பொருளாதார கலாச் சார பிரச்சினைகளையும் தீர்வையும் இஸ்லாமிய வரலாறு எனும்  கண்ணாடி மூலம் பார்த்து பட்டை தீட்ட முயன்றுள்ளேன்.நான் கடந்து வந்த காலங்களின் தடங்களைப் பதியும் ஒரு முயற்சியாகவும் நான் துயரும் இஸ்லாமிய மார்க்கத்தை மனித குல மேம்பாட்டுக்குப் பயன் படும் ஒரு கருவியாக அறிமுகப் படுத்துவதாகவுமே எனது கவிதைகளை அறிமுகப் படுத்தியுள்ளேன். 

இந்தத் தொகுப்பில்  வேறெந்தக் கவிதைகளை விடவும் எம் உயிர் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வாழ்வை சுருக்கமாகக் சித்தரிக்கும் உலகம் போற்றும் உத்தம நபி நாதர்  ...... என்ற கவிதையே எனக்கு ஆத்ம திருப்தியை அளித்த கவிதைஅந்தத் திருப்திக்கான முழுக் காரணம் கவவிதையல்ல- அந்தக் கவிதை யார் பற்றிச் சொல்லத் துணிந்ததோ அவரே காரணம்.

 நான்  நபி முகம்மது (ஸல்) அவர்களை என்னைவிட  வும் எனது பெற்றோரை விடவும்  எனது மனைவி மக்களை விட வும் உலக மக்கள் அனைவரையும் விடவும்  நேசிக்கின்றேன்.இந்த நேசம் பாசம் அன்பை இந்தக்  கவிதை மூலம் வெளிக் கொண்டுவர எத்தனித்துள்ளேன். 

அகிலத்துக்கு அருளாக வந்தவரும் இந்த உலகை வளப்படுத்தியதோடு ஆன்மீகத்தையும் செம்மைப் படுத்திய  மனித வரலாற்றிலே தோன்றிய  உத்தமர்களின் அணியில் முதலாவது  இடத்தை ப் பெற்றவருமான   நபிகள் நாயகம்  பற்றி நான் கற்று அறிந்ததை முடியுமான வரை அவரின்  முழுமை யான ஆளுமையோடு   சில நூறு பேருக் கேனும்  அறியத்  தர வேண்டும் என்ற அவாவில் செய்யப் பட்ட ஒரு சிறு முயற்சியே இதுவாகும்.. 

என் கவிதை வரிகளால் நபிகள் நாயகம் அவர்களின் சரிதத்தைத் தொட்டுப் பார்க்கக் கிடைத்தது கூட யான் பெற்ற பெரும் பேறு என்றே உறுதியாக நம்புகிறேன்அல்ஹம்துலில்லாஹ்!!

 

எதுகை மோனைகளோடு  அமைந்த மரபுக் கவிதைகள் ஒரு புறம். பட்டி மன்றம் போன்று சகலரையும் கவர்ந்து இழுத்து கட்டிப் போடுகின்ற     புதுக் கவிதைகள் இன்னொரு புறம். இந்த இரு வகைக் கவிதைகளும் உங்களின் காதுகளுக்கு இனிமை சேர்க்கக் காத்திருக்கின்றன..   அதே போன்று  குழப்பம் தராத சிறப்பான கருத்துக்கள் நிச்சியமாக  உங்களின்  மனதுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமையவுள்ளன. 

எனது அறிவு ஆற்றல் அணுபவ வளர்ச்சிக்கு  ஏற்ப வளர்ந்த சிந்தனைகளை கவிதைகள்  எனும் மெல்லிசை மூலம்  கூறக் கிடைத்தமையும்அவற்றை     நூலுருப் படுத்தவும் ஒலித்தட்டில் கொண்டு வரவும்  கிடைத்தமையும்  மிக  திருப்தியாக உள்ளது..இந்த தொகுப்பில் உள்ள உரை நடை, புதுக் கவிதைகள் , மரபுக் கவிதைகள் யாவும் அந்தலீப்மடவளையூரான், மனாப் எம் இஸ்மாயில்ஹாரூன் மூஸா என்ற பல புனைப் பெயர்களோடு மக்களுக்கு மத்தியில் கடந்த மூன்று தசாப்தங்களாக அறிமுகமானவைகளாகும். 

 

 

இந்த சந்தர்ப்பத்தில் எனது கல்வி வளர்ச்சிக்கு என்றும் எனக்கு ஊக்கமளித்து வந்த தாய் மாமா அல் ஹாஜ் முகமது சமீன் அவர்களுக்கும், எனது உடன் பிறந்த சகோதர சோகாதரிகளுக்கும், எனது மனைவி,பிள்ளைகளுக்கும் நன்றிகள் கூற கடமைப் பட்டுள்ளேன்.

இந்தக் கவிதை நூலின் சகல ஓவியங்களையும் சிறப்பாக தீட்டியும்  பக்கங்களை மெருகூட்டியும் தந்த எனது கல்லூரி வகுப்பு நண்பன் திரு.ஆஸிப் புகாரி அவர்களுக்கும் இந்த நூல் அச்சில் வருவதற்கு துணை புரிந்த  எனது கல்லூரி வகுப்பு நண்பன் கவிஞர் அன்ஸார் எம் ஷியாம் அவர்களுக்கும் 

ஒலி வடிவிலே இந்தக் கவிதைகளை வாசித்துத் தந்த சகல நண்பர்களுக்கும் மிகப் பெரிய நன்றி கூறக்  கடமைப் பட்டுள்ளேன்.

 

மேலும் இந்த நூலுக்கான மிக அழகிய  பின் அட்டை அறிமுகக் குறிப்பைத் தந்த நளீமியா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எச்.எம்.பளீல்  நளீமி அவர்களுக்கும் சிறப்பானதோர் அணிந்துரையைத்  தந்த தென் கிழக்குப் பல்கலைக் கழக பேராசிரியர் ரமீ ஸ் அப்துல்லாஹ் அவர்களுக்கும் சிறப்பு நன்றி கூறக்  கடன் பட்டுள்ளேன்.

 

மேலும் இந்த நூலுக்கான மிக அழகிய  பின் அட்டை அறிமுகக் குறிப்பைத் தந்த நளீமியா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எச்.எம்.பாலில் நளீமி அவர்களுக்கும் சிறப்பானதோர் அணிந்துரையைத்  தந்த தென் கிழக்குப் பல்கலைக் கழக பேராசிரியர் ரமீ ஸ் அப்துல்லாஹ் அவர்களுக்கும் சிறப்பு நன்றி கூறக்  கடன் பட்டுள்ளேன்.

 

பாலர் வகுப்பு முதல் எனது தமிழுக்கும் அறிவு ஆற்றலுக்கும் இலக்கிய வளத்துக்கும் காரணமாக இருந்த சகல ஆசிரிய குழாத்துக்கும்இந்த கவிதைத் தொகுப்பை அழகாக வெளிக் கொணர்வதில் என்னை விடவும் ஆர்வமாக இருந்த எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும்எனது முன்னேற்றத்தில் அக மகிழும் அத்தனை பேருக்கும் 

எல்லாம் வல்ல இறைவன் தனது அருள் மழையை பொழிவானாக என்றும் அளவற்ற நற் கூலிகளை வழங்குவானாக என்றும் பிரார்த்திக்கின்றேன். 

எனது இறைவனே! எனது இந்த சிறு முயற்சியை என்னிடமிருந்து பொருந்திக் கொள்வாயாக..

--



 Haroonmoosa

(Sheikh Mohamed Ismail)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மாற்றம் தேடும் மனிதர்கள்

  மாற்றம் தேடும் மனிதர்கள்